×

பூண்டு காய்கறி சூப்

தேவையானவை:

பூண்டு – 6-7
இஞ்சி – 1 துண்டு
வெங்காயம்- 1 பெரியது
கேரட், முட்டைக்கோஸ்,
பச்சை பட்டாணி, சோளம், பீன்ஸ் – 1கிண்ணம்
கார்ன்ஃப்ளார் மாவு – 1 தேக்கரண்டி
கறுப்பு மிளகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
வெண்ணெய் – 1 தேக்கரண்டி.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெங்காயம் மற்றும் பிற காய்கறிகளையும் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். காய்கறிகள் சிறிது மென்மையாகும் வரை அனைத்தையும் வதக்க வேண்டும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். அதனுடன் உப்பு சேர்த்து பூண்டு மற்றும் மிளகு சேர்க்கவும். எல்லாம் நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும். மற்றொரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார் மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிடவும். கலவை நன்கு கொதி வந்ததும் சூப்பில் இந்தக் கலவையைச் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கிவிடவும். அதனுடன், சூடான வறுக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் சேர்த்து பரிமாறவும்.

The post பூண்டு காய்கறி சூப் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!